ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!முதல்வா் நாளை குமரி வருகை!வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ரத்த பாசம் – விமரிசனம்

பாசத்தை விட ரத்தம் தான் அதிகமாகப் பிரவாகமெடுத்து ஓடுகிறது. (படத்தில் எக்கச்சக்கமான கொலைகள்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:11 pm

உமா ஷக்தி.

பாசத்தை விட ரத்தம் தான் அதிகமாகப் பிரவாகமெடுத்து ஓடுகிறது. (படத்தில் எக்கச்சக்கமான கொலைகள் இடம் பெற்றுள்ளன) நம்பியார், மனோரமா, மோகன்பாபு ஆகிய மூன்று வில்லன்களுக்கும் சக அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஆளுக்கொரு கொலை செய்கிறார்கள்!

சிவாஜிகூட கொன்னுபுட்டார்! (நடிப்பில்தான்) ‘பாசமலரு’க்குப் பிறகு இதில் பாசத்தை பலமாகப் பொழிந்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு இதில் ஜெய்சித்ரா நடித்திருக்கிறார். எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி அமைந்துவிட்ட அவரது ஒப்பனையில் இன்னும் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம்.

பாவம் பிரமிளா! ஜெய்கணேஷிடமும், நம்பியாரிடமும் மாறி மாறிக் கன்னத்தில் அடி வாங்குவதற்குத்தான் அவருக்குச் சரியாக இருக்கிறது.

மாஸ்டர் ஜெய்கணேஷ் (ஜெய்கணேஷின் மகன்) பிய்த்து உதறிவிட்டான்.

அது சரி, நாதசுரமும், தவிலுமாக மனோரமா, தேங்காய் சீனிவாசன் புடைசூழ ஸ்ரீபிரியா எதற்கு வெளிநாடு செல்கிறார்? ‘அவர் ஒரு நாட்டியக் கலைஞர். ஆகவே நிகழ்ச்சி அளிக்கப் போகிறார்’! என்றால், அதற்கு அந்த இரண்டும் பக்கவாத்தியங்களா?

இந்தப் படம் டிரைவர் இல்லாத பஸ்சைப் போன்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.