ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!முதல்வா் நாளை குமரி வருகை!வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அவசியம் தானா?

திரைப்படங்களில் முத்தக் காட்சிகள் இடம் பெறலாமா என்பது பற்றிச் சுவையாகப் புது தில்லிப் பாராளுமன்றத்தி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:11 pm

உமா ஷக்தி.

திரைப்படங்களில் முத்தக் காட்சிகள் இடம் பெறலாமா என்பது பற்றிச் சுவையாகப் புது தில்லிப் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றிருக்கிறது.

மத்திய ஒளிபரப்பு அமைச்சர் சாத்தே, ‘யார் தான் முத்தம் வேண்டாம் என்று சொல்லப் போகிறார்கள்?’ எனக் கேட்டு மன்றமே குலுங்கிச் சிரிக்கும்படி செய்திருக்கிறார்.

ஆனால் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ‘அப்படிப்பட்ட காட்சிகள் நமது பண்பாட்டிற்கு உலை வைத்துவிடும்’ என்று கூறி இருக்கிறார்.

மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்களின் கருத்தை நாம் ஆதரிக்கிறோம்.

புது தில்லியில் இருப்பவர்கள் நாகரிகக் கண்ணோட்டத்துடன் திரு சாத்தே அவர்களின் கருத்தை ஆரவாரத்துடன் ஆதரிக்கிறார்கள் என்றாலும் பெரும்பாலான மக்களின் மன இயல்புக்கும் கலாச்சாரத்திற்கும் அப்படிப்பட்ட காட்சிகள் முரண் ஆனவை. ஆகவே திரு சாத்தே பாராளுமன்ற உறுப்பினர்களின் கைத்தட்டலை மனத்தில் கொண்டு முத்தம் அவசியம்தான் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது.

கலர் பிலிம் உயர்வினால் படத் தயாரிப்புக்கு அதிகம் பணம் செலவாகிறது. திடீர் விலை உயர்வைக் குறைக்க வழி செய்ய வேண்டும் என்று தமிழ் நாட்டிலிருந்து படம் தயாரிப்பாளர்கள் புது தில்லுக்குச் சென்று கூக்குரலிட்டிருக்கிறார்கள்.

அதற்கு வழி செய்யாமல் புது தில்லியில் முத்தக் காட்சி அவசியமா, அவசியமில்லையா என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். கரவொலி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தில்லிபுரி ஒரு விந்தைபுரிதான்! சந்தேகமில்லை!

-நவீனன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.