பள்ளி மாணவ-மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 28 விளையாட்டு விடுதிகள், 5 விளையாட்டுப் பள்ளிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்டு வருகின்றன. ஈரோடு, திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகர்கோயில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம், ஆகியவற்றில் விடுதிகள் உள்ளன. மாணவர்களை பொருத்தவரை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி,கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், ஊட்டி, விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களில் விடுதிகள் உள்ளன.