பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை
ஆதார் எண் இருந்தால் போதும்
தமிழ்நாடு பதிவு (ஆவணப் பதிவிற்காக அடையாள அட்டை சரிபார்ப்பு) விதிகள் 2018 (Tamil Nadu Registration (Identity Verification for the Registration of Documents) Rules, 2018.) மற்றும் பதிவு சட்டம் 1908 ன் கீழ் பதிவுத்துறைத் தலைவர் ஜே.குமரகுருபரன் 12, செப்டம்பர், 2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிக்கைகள் விவரம் –
ஆதார் எண் இருந்தால் இனி வருங்காலங்களில் பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை.
தமிழகத்தில் சார்பதிவு அலுவலகங்களில் பத்திரங்கள் பதிவு செய்யப்படும் போது சிலநேரங்களில் மோசடி நடப்பதாக கூறப்படுகிறது. சமூக விரோதிகள் சிலர் போலியாக ஆவணங்கள் தயாரித்து பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதைத் தடுக்க தற்போது பதிவு துறையில் புதிய யுக்தியை கடைபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஆதார் நிறுவனத்துடன் (Unique Identifi cation Authority of India) பதிவுத்துறை ஒப்பந்தம் போட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு சொத்தை வாங்குபவர் மற்றும் விற்பவர் ஆதார் எண்ணை சரிபார்க்க முடியும்.
அதில், இரண்டு பேரின் ஆதார் எண் சரிதானா என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதில், குறிப்பிட்ட நபரின் ஆதார் எண் இல்லை எனில் பத்திரம் பதிவு செய்ய முடியாது. மேலும், அவர்களது ஆவணங்கள் முழுவதுமாக சரிபார்க்கப்படும். ஆதார் எண் சரியாக இருந்தால் பதிவு செய்யப்படும் பத்திரங்களுக்கு சாட்சியங்கள் தேவையில்லை.
மேலும் வயதானவர்களுக்கு கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது. எனவே அவர்களுக்கு கண்விழி ரேகையை வைத்து பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதற்கு அரசு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் இந்த விதிகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
‘போலி ஆதார் எண்ணை’ பயன்படுத்தி சிலநேரங்களில் சொத்துகள் விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜிக்கு ஏராளமான புகார்கள் வந்தது.
அந்த புகாரின் பேரில் பதிவுத்துறை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இனிவரும் காலங்களில் பத்திரம் பதிவு செய்யப்படும் போது ஆதார் எண் மற்றும் கைரேகை பதிவு அவசியம். இவ்வாறு கைரேகை பதிவு செய்யப்படும் போது சம்பந்தப்பட்டவர்களின் ஆதார் எண், முகவரி இதுதானா என்பது பதிவுத்துறை அதிகாரிகளுக்குத் தெரியவரும் இதன்மூலம் போலி ஆவணப்பதிவு முழுவதுமாக தடுக்கப்படும்’
என அறிக்கை தெரிவிக்கிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


