1. மருத்துவ நலம் பேணும் நிறுவனங்கள் என்பதன் பொருள் மத்திய அரசால் மாநில அரசால் அல்லது உள்ளாட்சி அமைப்பால் நிர்வகிக்கப்படும் மக்களின் மருத்துவ நலம் பேணும் நிறுவனங்கள் மற்றும் நோயுற்றோருக்கு சிகிச்சை தரவல்ல அவர்களை தங்க வைத்து மருத்துவ சிகிச்சையளித்து உபசரிக்கும் தனியார் மருத்துவமனை, தனியார் தாய்மைப்பேறு தொடர்பாக குழந்தை பிறப்பதற்கும் முன்பும் பின்பும் பெண்களை தங்க வைத்து சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள், உடல், மனம் தொடர்பான ஊறுகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள், நோய்கள் மருத்துவம் பார்த்த பின்பு அல்லது அறுவை சிகிச்சைக்கு பின்பு தங்கியிருக்கும் இல்லங்கள் ஆகியவற்றை குறிக்கும்.