திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

குடமிளகாய் பிரியாணி

News image
Updated On :29 ஜனவரி 2017, 6:30 pm

தேவையான பொருட்கள்:
பச்சரிசி (அ) பாசுமதி அரிசி - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
நாட்டு தக்காளி - 2
குடமிளாகாய் - 2
புதினா - 1 கட்டு (சிறியது)
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையானவை
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 2 பல்லு
தாளிக்க தேவையானவை
நெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - 6
கிராம்பு - 6
ஏலக்காய் - 4 (தட்டிக் கொள்ளவும்)
சோம்பு பொடி - 1 தேக்கரண்டி
அன்னாசி பூ - 2 இதழ்
மராட்டி மொக்கு - 3
பிரியாணி இலை - 1
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
பிரியாணி மசாலா - அரை தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி

செய்முறை: அரிசியை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் நீரை வடிகட்டி கழுவி கொள்ளவும். புதினாவை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை நீள வாக்கிலும், தக்காளியைப்  பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறிக் கொள்ளவும். குடமிளகாயை  துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

குக்கரில் 2 தேக்கரண்டி நெய், 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, மராட்டி மொக்கு, பிரியாணி இலை போட்டு

தாளிக்கவும். பின்னர், அரைக்க கொடுத்துள்ள பொருள்களை அரைத்து, இதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு சோம்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய பெரிய

வெங்காயம், புதினா தழை சேர்த்து வதக்கவும். அடுத்து பச்சைமிளகாய், தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும். பின்பு நறுக்கிய குடமிளகாயையும் அதனுடன்

சேர்க்கவும்.  அதனுடன் மஞ்சள்தூள், பிரியாணி மசாலா, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

அடுத்து ஊறவைத்து வடிக்கட்டிய அரிசியைப் போட்டு (அரிசி 1 பங்கு ; தண்ணீர் 2 பங்கு) லேசாக கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிய பின் குக்கரை மூடி

2 விசில் வரும் வரை வேக வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.  குக்கர் ஆவி அடங்கியதும் கொத்தமல்லித்தழை சேர்த்து லேசாக கிளறி பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.