குதிரைவாலி காய்கறி சாதம்


தேவையானவை:
குதிரைவாலி அரிசி - 1 கிண்ணம்
புதினா இலைகள் - சிறிது
தேங்காய் - 1 மூடி
வெங்காயம்(பெரியது) - 1
காய்கறிகள் : கேரட், பீன்ஸ், குடைமிளகாய், நாட்டு மக்கா சோளம், பச்சைப்பட்டாணி - அரை கிண்ணம்
இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் - சிறிது
ஏலக்காய், பட்டை, கிராம்பு - தலா 2
வெண்ணை - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: காய்கறிகளைக் கழுவி, சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை இடித்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் வெண்ணெய்யை விட்டு காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
அதனுடன் 2 கீறிய பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் இடித்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது, புதினா போட்டு வதக்கி காய்கறிகள், உப்பு, மஞ்சள் சேர்த்து தேங்காய்ப் பால் 2 டம்ளர் ஊற்றி வேக விடவும்.
இந்தக் கலவை கொதித்ததும் குதிரைவாலி அரிசியை போட்டு வெந்ததும் இறக்கவும். குதிரைவாலி காய்கறி சாதம் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...