தெலுங்கில் அல்லம் என்றால், இஞ்சி. பச்சடி என்றால் ஊறுகாய். 10 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். வயிற்றுக்கு மிகவும் நல்லது, இந்த அல்லம் பச்சடி.
தேவையான பொருட்கள்
தோல் சீவி பொடியாக நறுக்கின இஞ்சி - முக்கால் கிண்ணம்
வெல்லம் - முக்கால் கிண்ணம்
புளி பேஸ்ட் - ஒன்றரை மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
பூண்டு - 1 பல்
வறுத்த வெந்தயம் - 1 தேக்கரண்டி
தாளிக்க:
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2, கிள்ளியது
உப்பு - ருசிக்கேற்ப
செய்முறை:
இஞ்சி, பூண்டு, உப்பு, புளி பேஸ்ட், மிளகாய்த்தூள் ஆகியவற்றை, மிக்சியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பிறகு வெல்லம், மற்றும் எண்ணெய் விடாமல் வறுத்த வெந்தயம் ஆகியவற்றையும் சேர்த்து அரைக்கவும். ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சுட வைத்து, மேற்கூறிய தாளிப்புக்களைச் சேர்க்கவும்.
பிறகு அரைத்த இஞ்சி விழுதையும் சேர்த்து, 3-4 நிமிடங்கள் சிறு தீயில் வதக்கி இறக்கவும். அல்லம் பச்சடி தயார். சூடான பெசரெட்டுடன், பரிமாறவும். சுவையாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


