தேவையான பொருள்கள்:
(கத்தரி, வெண்டை, கேரட், பீன்ஸ்,
முருங்கைக்காய், வாழைக்காய்,
உருளைக்கிழங்கு, குடை மிளகாய் என
எல்லா விதமான காய்கறிகளையும் சேர்க்கலாம் -
2 கிண்ணம்
துவரம் பருப்பு - 1 கிண்ணம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
புளி - எலுமிச்சை அளவு
கடுகு - உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக் கேற்ப
கறிவேப்பிலை,கொத்து மல்லி - சிறிது
செய்முறை:
தேவையான காய்கறிகளை எடுத்து சுத்தம் செய்து நீளவாக்கில் திட்டமான அளவில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் துவரம் பருப்பு, பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், சீரகம் சேர்த்து 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்து கடைந்து கொள்ளவும்.
பின்னர், வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அடுத்து, தக்காளியை வதக்கவும். பின்னர், நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர்விட்டு மூடி வேகவிடவும்.
காய் நன்கு வெந்தவுடன், கடைந்த பருப்பு மற்றும் புளிக் கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழையைத் தூவி இறக்கிவிடவும்.
வாசனையான கதம்ப சாம்பார் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


