சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

லட்சக் கெட்ட கீரை கூட்டு

லட்சக் கெட்ட கீரையின் நரம்புகளை நீக்கி  பொடியாக நறுக்கி, ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

ஹேமலதா

தேவையான பொருள்கள்:

லட்சக் கெட்ட கீரை - 7
பாசிப் பருப்பு - அரை கப்
தக்காளி, வெங்காயம் - தலா 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
அரைப்பதற்கு:
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
சீரகம் - அரைத் தேக்கரண்டி

செய்முறை:

லட்சக் கெட்ட கீரையின் நரம்புகளை நீக்கி  பொடியாக நறுக்கி, ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர், அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு வறுத்து  மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

அதனுடன் பாசிப் பருப்பு, கீரை, பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து 2 விசில்விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர், கடுகு தாளித்து சேர்த்து கிளறி பரிமாறவும். சுவையான லட்சக் கெட்ட கீரை கூட்டுத் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.