சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சேப்பங்கிழங்கு சாப்ஸ்

சேப்பங்கிழங்கை வேகவைத்து எடுத்து தோலை நீக்கிக் கொள்ளவும். 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

ஹேமலதா


தேவையான பொருள்கள்:

சேப்பங்கிழங்கு - கால் கிலோ
மிளகு - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்  - 2
பூண்டு - 4 பல்
வெங்காயம் - 2
தக்காளி - 1
கடுகு - உளுந்து - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை:  

சேப்பங்கிழங்கை வேகவைத்து எடுத்து தோலை நீக்கிக் கொள்ளவும்.  பின்னர்,  நீளவாக்கில் இரண்டாக வெட்டி, வாணலியில்  எண்ணெய்விட்டுப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர், மிளகாய் வற்றல், பூண்டு, மிளகு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு கடுகு- உளுந்து தாளித்து,  பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை நன்கு வதக்கிக் கொள்ளவும்.

அத்துடன்  பொடித்த மிளகு கலவை, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். அத்துடன் பொரித்த சேப்பங்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சேப்பங்கிழங்கு சாப்ஸ் ரெடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.