15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சிறுதானிய போண்டா ( தினை - சோளம்)

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்

News image
Updated On :2 மே 2016, 6:25 am

தேவையானவை:

தினை மாவு - 1/2 கிண்ணம்

சோள மாவு - 1/2 கிண்ணம்

உருளைக்கிழங்கு - 3

வெங்காயம் - 2

இஞ்சி விழுது  - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிது

பச்சை மிளகாய் - 1

மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி

கடுகு - சிறிது

உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இத்துடன் மசித்த கிழங்கு, உப்பு, மஞ்சள்தூள், கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசைந்து  சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

தினை மாவு மற்றும் சோளமாவு இரண்டையும் ஒன்றாகக் கலந்து அத்துடன் சிறிது உப்பு, மிளகாய்த்தூள், ஆப்ப சோடா சேர்த்து, கொஞ்சமாக தண்ணீர்விட்டு கலந்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைத்து கொள்ளவும்.

 எண்ணெய் காய்ந்தவுடன் உருளைக்கிழங்கு மசாலா உருண்டைகளை, மாவில் தோய்த்து எண்ணெய்யில் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.