மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சீரகச்சாதமும் பாசிப்பயிறு கிரேவியும்...

சீரகச் சாதத்திற்கு பாசிப்பயிறு கிரேவி அருமையான சைட் டிஷ்

News image
Updated On :7 ஜூலை 2016, 11:01 am

சீரகச்சாதம் (Jeera Rice)

தேவையான பொருட்கள்:

சீரகச்சம்பா அரிசி-1கப்

தண்ணீர்-2 கப்

உப்பு-தேவையான அளவு

நெய்-ஒரு டீஸ்பூன்

தாளிக்க:

சீரகம் -1 டீஸ்பூன்

பிரியாணி  இலை- 1

லவங்கப்பட்டை -1

கிராம்பு -ஐந்து /ஆறு

முந்திரிப்பருப்பு -8

காய்ந்த திராட்சை -6

குங்குமப் பூ -1சிட்டிகை

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

வெங்காயத்தாள்-1 கைப்பிடி(பொடியாக நறுக்கியது)

செய்முறை :

ஒரு கப் சீரகச்சம்பா அரிசி முங்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி  5 நிமிடங்கள் ஊற வைக்கவும்,அரிசியை அதிகம் பிசையாமல் மென்மையாகக் கழுவி தண்ணீரை வடித்து விட்டு குக்கரில் அரிசியைப் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு டீஸ்பூன் நெய் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பில் ஏற்றவும்.ஒரு விசில் வந்ததும் இறக்கி வைத்து கேஸ் போனதும் குக்கரைத் திறந்து தாளிக்க கொடுத்த பொருட்களை தாளிதம் செய்து சாதத்துடன் கலக்கவும்.கலக்கும் போது அன்னக்கரண்டிபயன்படுத்த வேண்டாம்.1 டேபிள் ஸ்பூன்  நெய் விட்டு குக்கரை மூடி விட்டு சில நிமிடங்கள் சென்றதும் முள் கரண்டியால் மென்மையாகக் கிளறி விட்டு அலங்காரமாக மேலே பொடியாக நறுக்கிய வெங்காயத் தாள் தூவிப்  பரிமாறலாம்,இந்த சீரகச் சாதத்திற்கு பாசிப்பயிறு கிரேவி அருமையான சைட் டிஷ்.

பாசிப்பயிறு கிரேவி:

Story image

தேவையான பொருட்கள்:

பாசிப்பயிறு -1கப்

தண்ணீர் -2 அல்லது 21/2கப்

சின்ன வெங்காயம் -6

மசால் பொடி -2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

அரைக்க :

தக்காளி-2 அல்லது 3

பச்சை மிளகாய் -1

இஞ்சி -1 சின்ன துண்டு

பூண்டு -4 பல்

மிளகு -1 டீஸ்ஸ்பூன்

பெருஞ்சீரகம்-1 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய்(அ)நெய் - 2 டீஸ்பூன்

கடுகு -1டீஸ்பூன்

உளுந்தம் பருப்பு -1டீஸ்பூன்

கருவேப்பிலை -1ஆர்க்  

செய்முறை:

குக்கரில்  ஒரு கப் பாசிப்பயிறு எடுத்துக்கொண்டு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்,அரைத்து எடுத்த மசாலாப் பொருட்கள் மற்றும் மஞ்சள் தூள்,மசால் பொடி தேவையான அளவு உப்பு எல்லாம் சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி  நன்கு கிளறி மூடிவிட்டு குக்கரை அடுப்பில் ஏற்றவும்.மூன்று விசில் வந்ததும் இறக்கி தாளிதம் செய்து பரிமாறலாம்.சீரகசாதத்திற்கு பாசிப்பயிறு கிரேவி சேர்த்தால் குழந்தைகள் கூட இரண்டு பிடி அதிகம் சாப்பிடுவார்கள்.சுவையோடு சத்தும் அதிகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.