தேவையானவை:
மூங்கிலரிசி ரவை - 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
சின்ன வெங்காயம் - 6
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
பட்டை - 1
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: சின்ன வெங்காயத்தை தோலுரித்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி எடுக்கவும். மூங்கிலரிசியை ரவையாக உடைத்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவலை மிக்ஸியிலிட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து பிழிந்து 1 கிண்ணம் அளவிற்கு பால் எடுத்துக் கொள்ளவும்.
மண் பானையை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும். அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், நறுக்கின வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் 1 கிண்ணம் தேங்காய்ப் பால் சேர்க்கவும்.
மேலும் 1 கிண்ணம் தண்ணீருடன் உப்பு சேர்க்கவும். மண் பானையை சிறுதீயில் வைத்து மூடி வைத்து கொதிக்க விடவும். சுமார் 3 நிமிடங்கள் கழித்து, கொதித்து நுரை வரும் போது மூங்கிலரிசி ரவையைப் போடவும். பின் நன்கு கிளறி 15 நிமிடம் வேக விடவும். 3 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி விட்டு நன்கு வெந்ததும் இறக்கவும்.
சுவையான சத்தான மூங்கிலரிசி தேங்காய்ப் பால் சாதம் தயார். மனமும் சுவையும் உள்ள ஒரு உணவு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


