தேவையானவை:
பூரணம் செய்ய:
வறுத்த வெள்ளை எள் - 2 மேசைக்கரண்டி
துருவியத் தேங்காய் - அரை முடி
சர்க்கரை - 3/4 டம்ளர்
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி, பாதாம் - 6
மாவு தயாரிக்க:
மைதா மாவு - 1/4 கிலோ
ரவை - 1/4 கிண்ணம்
சோடா உப்பு -2 சிட்டிகை
உப்பு - 2 சிட்டிகை
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா மாவை எடுத்துக் கொண்டு அதில் ரவை, சோடா உப்பு, உப்பு சேர்த்து வெண்ணெய் உருக்கி ஊற்றி நன்கு பிசைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் பொடித்த முந்திரி, பாதாம் பருப்பு, வெள்ளை எள், தேங்காய்த் துருவல் சேர்த்து வறுக்கவும். இறுதியாக சர்க்கரையைச் சேர்த்து வதக்கி இறக்கவும். கலவை சற்று கெட்டியாக இருக்கும் போதே எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற வைக்கவும்.
பின்னர், பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி , சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமான சப்பாத்தியாக தேய்த்து அதை எடுத்து சோமாஸ் செய்யும் அச்சில் வைத்து அதனுள் செய்து வைத்திருக்கும் பூரணத்தை வைத்து மூடி வைக்கவும்.
பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து, செய்து வைத்திருக்கும் சோமாசை, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.இனிப்பு சோமாஸ் ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


