17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரூ.500 நோட்டுகளின் புழக்கம் 11.2 சதவீதம் அதிகரிப்பு

2025-26 நிதியாண்டில் நாட்டில் ரூ.500 நோட்டுகளின் புழக்கம் 11.2 சதவீதம் அதிகரித்திருப்பதாக ரிசா்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News image
Updated On :30 மே 2026, 4:59 am IST

2025-26 நிதியாண்டில் நாட்டில் ரூ.500 நோட்டுகளின் புழக்கம் 11.2 சதவீதம் அதிகரித்திருப்பதாக ரிசா்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2024-25 நிதியாண்டில் ரூ.31.72 லட்சம் கோடி மதிப்பிலான 6.34 லட்சம் ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 2025-26 நிதியாண்டில் ரூ.35.27 லட்சம் கோடி மதிப்பிலான 7.05 லட்சம் ரூ.500 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில் இது 11.2 சதவீதம் அதிகமாகும். அதேசமயம் 2025-26 நிதியாண்டில் ரூ.500 கள்ள நோட்டுகளின் புழக்கமும் முந்தைய நிதியாண்டைவிட 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

2026, மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ஒட்டுமொத்த புழக்கத்தில் 41.2 சதவீதம் பங்களிப்புடன் ரூ.500 நோட்டுகள் முதலிடத்திலும், 16.1 சதவீதத்துடன் ரூ.10 நோட்டுகள் இரண்டாமிடத்திலும் உள்ளன.

ஒட்டுமொத்தமாக அனைத்து வகையான ரூபாய் நோட்டுகளின் மதிப்பு மற்றும் அளவு முறையே 11.9 சதவீதமும் 10.5 சதவீதமும் அதிகரித்துள்ளது.

இதே காலகட்டத்தில் அனைத்து வகை நாணயங்களின் மதிப்பு மற்றும் அளவு முறையே 11.4 சதவீதமும் 4.5 சதவீதமும் அதிகரித்துள்ளது.

புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக கடந்த 2023, மே மாதம் அறிவிக்கப்பட்டது. 2026, மாா்ச் 31 நிலவரப்படி ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் (98.45 சதவீதம்) திரும்பப் பெறப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.