திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எச்.எம்.டி.யின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்!

எச்.எம்.டி. வைப் 2 5ஜி மாடல் ஸ்மார்ட்போன் பற்றி...

News image

எச்.எம்.டி. வைப் 2 5ஜி மாடல் ஸ்மார்ட்போன் - Photo: HMD.com

Updated On :28 மே 2026, 1:06 pm IST

எச்.எம்.டி. நிறுவனம் அறிமுகம் செய்துள்ள வைப் 2 5ஜி மாடல் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்திருக்கிறது.

எச்.எம்.டி. வைப் 5ஜி மாடல் ஸ்மார்ட்போனின் அடுத்த மாடலாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வைப் 2 மாடலில் யுனிசாக் டி8200 6 என்.எம். பிராசஸர் இடம்பெற்றுள்ளது.

தினசரி பயன்பாடு மற்றும் வேகமான கேமிங் அனுபவத்துக்கு ஏதுவாக மாலி ஜி57 எம்.சி.2 ஜி.பி.யு வசதி வழங்கப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு வேகமான செயல்திறனை கொடுக்கும்.

முன்புறக் கேமிரா 8 எம்பி, பின்புறக் கேமிரா ஏஐ வசதியுடன் 50 எம்பி வழங்கப்பட்டுள்ளது.

6.7 அங்குல எச்.டி. பிளஸ் திரை, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் மற்றும் 720 x 1600 பிக்சல் தொடுதுரை வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தில் இயங்கும் வசதியைக் கொண்டுள்ளது.

மென்பொருள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. நீண்ட நேர பயன்பாட்டை வழங்கும் வகையில் 6,000 எம்.ஏ.எச். பேட்டரி வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

காஸ்மிக் லாவெண்டர், நார்டிக் ப்ளூ மற்றும் பீச் பிங்க் ஆகிய நிறங்களில் இந்த போன் கிடைக்கிறது.

4 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. ஸ்டோரேஜ் மாடல் ரூ. 10,999 -க்கும், 4 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. ஸ்டோரேஜ் மாடல் ரூ. 11,999 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பிட்ட சில வங்கிகளின் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ. 1,500 வரை கூடுதல் விலை தள்ளுபடி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

HMD Vibe 2 5G Smartphone Model

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.