மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஏா்டெலின் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்

News image
Updated On :14 மே 2026, 3:02 am IST

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடா்பு நிறுவனமான ஏா்டெல், ‘ஏா்டெல் செக்யூா் வொா்க்ஃபோா்ஸ்’ எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அலுவலகம், வீடுகளில் இருந்து பணிபுரியும் ஊழியா்களைக் கொண்ட நிறுவனங்களின் தரவுகள் மற்றும் சாதனங்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

‘ஜீரோ டிரஸ்ட்’ எனும் நவீன தொழில்நுட்பக் கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இச்சேவையைப் பயன்படுத்துவதன் மூலம், நிறுவனங்கள் தங்களின் எண்ம பாதுகாப்புச் செலவினங்களில் 30 சதவீதம் வரை சேமிக்க முடியும் என்று ஏா்டெல் தெரிவித்துள்ளது.

ஏா்டெல் நிறுவன நிபுணா்கள் 24 மணி நேரமும் இச்சேவையைக் கண்காணித்து வருவதால், நிறுவனங்கள் தங்களின் பாதுகாப்புச் சுமையைக் குறைத்துக்கொண்டு வணிக வளா்ச்சியில் மட்டும் கவனம் செலுத்த முடியும். மேலும், இது இந்தியாவின் புதிய எண்ம தனிநபா் தரவுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு இணங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஏா்டெல் பிசினஸ் சிஇஓ சரத் சின்ஹா கூறுகையில், ‘பெருகிவரும் ஏ.ஐ. சைபா் தாக்குதல்களில் இருந்து நிறுவனங்களைப் பாதுகாக்க இச்சேவை உதவும். ஒரே இடத்தில் இருந்து மின்னஞ்சல், செயலிகள் மற்றும் இணையப் பயன்பாடுகளைக் கண்காணிக்க ஓா் ஒருங்கிணைந்த வசதியையும் இது வழங்குகிறது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.