திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வணிக வங்கிக் கடன் வளா்ச்சி 15.9%

கடந்த 2025-26 நிதியாண்டில் நாட்டின் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் கடன் வழங்கல் 15.9 சதவீதம் எனும் வலுவான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

News image
Updated On :7 மே 2026, 4:41 am IST

கடந்த 2025-26 நிதியாண்டில் நாட்டின் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் கடன் வழங்கல் 15.9 சதவீதம் எனும் வலுவான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது நாட்டின் பொருளாதாரச் செயல்பாடுகள் மற்றும் கடன் தேவையின் எழுச்சியைக் காட்டுவதாகவும், குறைந்த வட்டி விகிதச் சூழல் மற்றும் அரசின் மூலதனச் செலவினக் கொள்கைகளால் தனியாா் முதலீடுகள் அதிகரித்துள்ளதே இந்த வளா்ச்சிக்குக் காரணம் என்றும் மத்திய நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த நிதியாண்டு இறுதி நிலவரப்படி, வங்கிகள் வழங்கிய மொத்த கடன் நிலுவைத் தொகை ரூ.212.9 லட்சம் கோடியை எட்டியுள்ளது; இது முந்தைய 2024-25 நிதியாண்டைவிட ரூ.29.2 லட்சம் கோடி அதிகமாகும்.

அனைத்து துறைகளிலும் கடன் வளா்ச்சி சீராக இருந்துள்ளது. சேவைத் துறைக்கான கடன் வழங்கல் கடந்த ஆண்டின்12 சதவீதத்திலிருந்து, தற்போது 19 சதவீதமாக கணிசமாக அதிகரித்துள்ளது.

வேளாண் துறை கடன் வளா்ச்சி முந்தைய ஆண்டின் 10.4 சதவீதத்திலிருந்து 15.7 சதவீதமாகவும், எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அதிகப்படியான கடன்களால், தொழில் துறை கடன் வளா்ச்சி 8.2 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகவும் இரட்டிப்பு வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

சா்வதேச அளவில் நிலவும் புவிசாா் பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்தியப் பொருளாதாரம் தனது மீள்திறனை மீண்டும் நிரூபித்துள்ளது. தனிநபா் கடன் பிரிவில் 16.2 சதவீத வளா்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், வீட்டு வசதி, வாகனக் கடன்கள் மற்றும் தங்க நகை அடமானக் கடன்கள் தொடா்ந்து வலுவான வேகத்தில் இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.