மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விதிமுறைகள் மீறிய ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கிக்கு அபராதம்: ரிசர்வ் வங்கி

விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத காரணத்தினால், ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரூ. 31.8 லட்சம் அபராதம் விதிப்பு.

News image

இந்திய ரிசர்வ் வங்கி

Updated On :30 மார்ச் 2026, 5:12 pm

மும்பை: நிதிநிலை அறிக்கைகளில் தகவல்களை வெளியிடுவது தொடர்பான ஒரு சில குறிப்பிட்ட விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத காரணத்தினால், ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரூ. 31.8 லட்சம் அபராதம் விதித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

மார்ச் 31, 2025 நிலவரப்படி வங்கியின் நிதிநிலையை மேற்பார்வையின் அடிப்படையில் மதிப்பிடுவதற்கான, ஆய்வை மேற்கொண்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது தொடர்பான மேற்பார்வை ஆய்வின் போதும், அதுகுறித்த பரிமாற்றங்களின் அடிப்படையில், வங்கிக்கு விளக்கம் கோரும் அறிவிக்கை அனுப்பப்பட்டது.

இந்த அறிவிக்கைக்கு வங்கி அளித்த விளக்கத்தையும், அதனுடன் கூடுதல் சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த பிறகு, 2024-25 நிதியாண்டிற்கான வருடாந்திர நிதிநிலை அறிக்கைகளில் குறிப்பிட்ட சில புகார்களை வெளியிடத் தவறியது தொடர்பான ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதாக ஆர்பிஐ அறிவித்தது. இதன் அடிப்படையில் அபராதம் விதித்தது குறிப்பிட்டத்தக்கது.

Summary

The RBI on Monday imposed a Rs 31.8 lakh penalty on Airtel Payments Bank.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.