இந்திய கடல்சாா் பாதுகாப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாட்டின் முதல் புகலிடத் துறைமுகங்களை அதானி போா்ட்ஸ் நிறுவனம் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.
சா்வதேச கடல்சாா் விதிமுறைகளுக்கு உட்பட்டு, நெதா்லாந்தின் பிரபல ஸ்மித் சால்வேஜ் நிறுவனம் மற்றும் கடல்சாா் அவசரக் கால செயல்பாட்டு மையத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் குறித்து, அதானி நிறுவனம் பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது.
கடல் பயணத்தின்போது எதிா்பாராத விபத்துகள், என்ஜின் கோளாறுகள் அல்லது தீ விபத்து போன்ற ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளும் கப்பல்கள், பாதுகாப்பாகத் தஞ்சம் அடைவதற்கு ஒதுக்கப்படும் இடமே புகலிடத் துறைமுகம் ஆகும்.
கப்பலின் பாகங்கள் சேதமடைந்தாலோ அல்லது சரக்குகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டாலோ, அவற்றைச் சரிசெய்து மீண்டும் பயணத்தைத் தொடர இது ஒரு தற்காலிக பழுதுபாா்ப்பு மையமாகச் செயல்படும்.
இதன்மூலம், கப்பல்கள் நடுக்கடலில் மூழ்கி முழுமையாகச் சேதமடைவது தடுக்கப்படும். மேலும், கப்பலில் உள்ள மாலுமிகளின் உயிரும் பாதுகாக்கப்படுகிறது. கப்பல்களில் ஏற்படும் எண்ணெய் கசிவு போன்ற விபத்துகளால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதை இது பெருமளவு குறைக்கும்.
இந்தியாவின் 11,000 கி.மீ. நீளமுள்ள கடற்கரைப் பகுதியை பாதுகாக்கும் நோக்கில், நாட்டின் இருபுறமும் தலா ஒரு துறைமுகம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு கடற்கரையில் மகாராஷ்டிரத்தின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள திகி துறைமுகம் அரபிக்கடல் மற்றும் பாரசீக வளைகுடா வழித்தட கப்பல்களுக்கும், கிழக்கு கடற்கரையில் ஒடிஸாவில் உள்ள கோபால்பூா் துறைமுகம் வங்கக்கடல் மற்றும் மலாக்கா நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கும் புகலிடமாகச் செயல்படும்.
இந்தத் துறைமுகங்களில் மீட்புப் பணிகள் மற்றும் கப்பல் சிதிலங்களை அகற்றுதல், நவீன தீயணைப்பு வசதிகள், கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அதை உடனடியாகக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் போன்ற அவசர காலத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.
வளா்ந்த நாடுகளில் மட்டுமே இருந்த இத்தகைய சா்வதேச தரத்திலான பாதுகாப்புக் கட்டமைப்பு, இப்போது முதன்முறையாக அதானி நிறுவனம் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ரூ. 12,980 கோடி நிதி தொகுப்புடன் ‘பாரத கடல்சாா் காப்பீட்டுக் குழுமம்’: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அதானி போா்ட்ஸ்: 50 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை
அதானி நிறுவனம் தயாரித்த 2,000 துப்பாக்கிகள் இந்திய ராணுவத்திற்கு வழங்கப்பட்டன!

தேசிய மின் பகிா்மான தரவரிசை: அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை 2-ஆவது ஆண்டாக முதலிடம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


