மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நடப்பு நிதியாண்டின் யூரியா உற்பத்தி 275.75 லட்சம் டன்!

நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில், இந்தியாவின் யூரியா உற்பத்தி 275.75 லட்சம் டன்களாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்தது.

News image

யூரியா - கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 3:28 pm

புதுதில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில், இந்தியாவின் யூரியா உற்பத்தி 275.75 லட்சம் டன்னாக உள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்தது.

அதே வேளையில், 2024-25 நிதியாண்டில், நாட்டின் யூரியா உற்பத்தி 306.67 லட்சம் டன்னாக இருந்தது.

தற்போது, ​​நாட்டில் 33 யூரியா உற்பத்தி ஆலைகள் உள்ள நிலையில், அவற்றின் மொத்த ஆண்டு உற்பத்தித் திறன் 269.42 லட்சம் டன் என்று ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் மாநிலங்களவைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

கடந்த 11 ஆண்டுகளில் யூரியாவின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் மூலம், 2014-15ல் ஆண்டுக்கு 225 லட்சம் டன்னாக இருந்த யூரியா உற்பத்தியை, 2023-24ல் 314.07 லட்சம் டன் என்ற சாதனை அளவை எட்டியது.

2024-25 நிதியாண்டில், நாட்டில் மொத்தம் 306.67 லட்சம் டன் யூரியா உற்பத்தி செய்யப்பட்டதாக படேல் தெரிவித்தார்.

Summary

India's urea production stood at 275.75 lakh tonnes in the first eleven months of this fiscal, the government said on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.