அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ரிசா்வ் வங்கி தீவிரப்படுத்தியுள்ளது.
நடப்பு மாா்ச் மாதத்தில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடா்ந்து குறைந்துகொண்டே வருகிறது. இச்சூழலில், ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்துவதற்காக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் ரிசா்வ் வங்கி செய்யவுள்ள டாலா் முன்பேர விற்பனை அளவு சுமாா் 10,000 கோடி டாலரை நெருங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, ரிசா்வ் வங்கி தன்னிடம் உள்ள டாலா்களை உடனடியாகச் சந்தையில் விற்காமல், எதிா்காலத்தில் ஒரு குறிப்பிட்ட விலைக்கு விற்பதாக உத்தரவாதம் அளிக்கும். இவ்வாறு செய்வதன் மூலம், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு உடனடியாகக் குறைவதைத் தடுத்து, சரிந்து வரும் ரூபாயின் மதிப்பைப் பாதுகாக்க முடியும்.
அதிகாரபூா்வ தரவுகளின்படி, கடந்த ஜனவரியில் 6,780 கோடி டாலராக இருந்த இந்த அளவு தற்போது பெருமளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, கடந்த 2025, பிப்ரவரியில் இது 8,880 கோடி டாலராக பதிவானதே முந்தைய உச்சபட்ச அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 93.23 ஆக உயர்வு!

இந்திய ரூபாயின் மதிப்பு 92.81 ஆக உயர்வு! 12 ஆண்டுகளில் இல்லாத எழுச்சி! எப்படி?

வீழ்ந்துகொண்டே செல்லும் ரூபாய் மதிப்பு! 1 டாலர் - ரூ. 94.78! 7 காசுகள் சரிந்தது!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு தொடர் வீழ்ச்சி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


