தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வாராக்கடனை மீட்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி!

பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ. 450.85 கோடிக்கும் அதிகமான வாராக்கடனை விற்பனை செய்யவுள்ளது குறித்து....

News image

பஞ்சாப் நேஷனல் வங்கி

Updated On :17 மார்ச் 2026, 4:07 pm

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ. 450.85 கோடிக்கும் அதிகமான வாராக்கடனை விற்பனை செய்வதன் மூலம், அதன் நிலுவையை வெகுவாக குறைப்பதற்கான ஒரு உறுதியான நிலைப்பாட்டைத் தொடங்கியுள்ளது.

அரசுக்கு சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கி, ரோல்டா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ரூ. 450.85 கோடி மதிப்புள்ள வாராக்கடனை விற்பனை செய்வதற்கான ஏலத்தினை இன்று தொடங்கியது.

இந்த சொத்து, ஹரியாணாவின் குருகிராமில் உள்ள சுமார் 7,800 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இடமும் அதில் உள்ள கட்டடமும் அடங்கும். இந்தச் சொத்துக்கான குறைந்தபட்ச விலை ரூ. 250 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதே வேளையில், நவம்பர் 31, 2024 நிலவரப்படி மொத்த நிலுவைத் தொகை ரூ. 450.85 கோடியாக உள்ளது.

இதற்கிடையில், சொத்தை தன்வசப்படுத்திய பிறகு வங்கி, இ-ஏலம், மூலம் ஏப்ரல் 7, 2026 அன்று காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை இணையத்தில் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சொத்தில் குருகிராம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ. 2.1 கோடிக்கும் அதிகமான நிலுவைத் தொகையும் உள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

State-owned Punjab National Bank on Tuesday invited bids to sell assets worth Rs 450.85 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.