மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

53% தள்ளுபடியில் 32 அங்குல ரியல்மி ஸ்மார்ட் டிவி!

ரியல்மி டெக்லைஃப் ஸ்மார்ட் டிவிக்கு 53% தள்ளுபடி பெறுவது குறித்து...

News image

ரியல்மி டெக்லைஃப் ஸ்மார்ட் டிவி - படம் / நன்றி - ரியல்மி

Updated On :16 மார்ச் 2026, 12:10 pm

ரியல்மி டெக்லைஃப் 32 அங்குல கியூஎல்இடி (TechLife 32 inch QLED) ஸ்மார்ட் டிவி 53% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

இதுவரை இல்லாத வகையில் இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதால், புதிய ஸ்மார்ட் டிவி வாங்க திட்டமிட்டிருந்தோர் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் டிவி, கூகுள் இயங்குதளம் (ஓஎஸ்) உடையது. இதனால், கூகுள் பிளே ஸ்டோர் பயன்படுத்தி விருப்பப்பட்ட ஓடிடி தளங்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

குவாட்கோர் புராசஸர் உடையது. 1GB உள் நினைவகமும் 8 GB நினைவகமும் கொண்டது.

ஹே கூகுள் என்ற குரல் பதிவு அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், பட்டன்களைப் பயன்படுத்தாமல், குரல் கட்டளைகள் மூலம் விரும்பிய படங்களை, பாடல்களைப் பார்க்கலாம்.

26W ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ மூலம் 5 விதமான ஒலித் திறன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ப்ளூடூத் மற்றும் வைஃபை போன்ற வயர்லெஸ் இணைப்புகளும் உள்ளன.

கியூஎல்இடி திரை கொண்டுள்ளதால், இரவுநேரக் காட்சிகளையும் துல்லியமாகப் பார்க்கும் அனுபவத்தைப் பெறலாம். அதற்கு ஏற்ப வண்ணத் திரள்களைக் கொண்டிருக்கும்.

ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் ரியல்மி டெக்லைப் 32 அங்குல ஸ்மார்ட் டிவிக்கு 53% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.10,299-க்கு இந்த ஸ்மார்ட் டிவியை பெறலாம்.

வங்கி அட்டைகளுக்கு மேலும் சலுகை கொடுக்கப்பட்டுள்ளதால், ரூ.9,269 விலையில் டெக்லைப் 32 அங்குல கியூஎல்இடி ஸ்மார்டி டிவியை வாங்க முடியும்.

Summary

realme TechLife 32 inch QLED TV 53% offer in Flipkart

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.