மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

30 மணி நேர பேட்டரி திறன்! மார்ச் 19-ல் அறிமுகமாகிறது ரியல்மி பி4 லைட்!

ரியல்மி நிறுவனத்தின் பி4 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது குறித்து...

News image

ரியல்மி பி4 லைட் - படம் / நன்றி - ரியல்மி

Updated On :16 மார்ச் 2026, 11:23 am

ரியல்மி நிறுவனத்தின் பி4 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இதன்படி மார்ச் 19 ஆம் தேதி ரியல்மி பி4 லைட் இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.

இந்தியாவில் அதிக பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் கொடுக்கும் நிறுவனங்களில் ரியல்மி முன்னணியில் இருந்து வருகிறது.

பி4 லைட் 4ஜி உள்பட இதற்கு முன்பு பி4 வரிசையில் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் 6,300mAh பேட்டரி திறனுடன் இருந்த நிலையில், பி4 லைட் ஸ்மார்ட்போனானது 7,000mAh பேட்டரி திறனுடன் அறிமுகமாகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்த அறிவிப்பை ரியல்மி நிறுவனம் இதுவரையில் வெளியிடவில்லை.

எனினும், முந்தைய ஸ்மார்ட்போன்களில் இருந்து மேம்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் சில சிறப்பம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

அதாவது, 7,000mAh பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணிநேரம் சார்ஜ் நீடிக்கும் திறன் உள்ளதாக ரியல்மி நம்பிக்கை அளித்துள்ளது.

ரியல்மி ஸ்மார்ட்போனில் அதிக பேட்டரி திறன் உடையதாக இருப்பதால், ரியல்மி பி4 லைட் ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு பயனர்களிடையே அதிகரித்துள்ளது.

மார்ச் 19 ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் ரியல்மி பி4 லைட் விற்பனை தொடங்குகிறது. ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்திலும் ரியல்மி கிளைகளிலும் ரியல்மி பி4 லைட் ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

Summary

Realme P4 Lite 5G launch in India set for March 19

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.