இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 92.37 ஆகச் சரிந்தது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை கடந்த மார்ச் 9 ஆம் தேதி அதிகபட்சமாக 115 டாலராக இருந்தது. பின்னர் சரிந்த நிலையில் இன்று(மார்ச் 12) மீண்டும் 100 டாலரைத் தாண்டியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று வர்த்தக முடிவில் 92.04 ஆக இருந்த நிலையில் இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் மேலும் 33 பைசா குறைந்து 92.37 ஆகச் சரிந்தது.
கடந்த மார்ச் 9 அன்று இந்திய ரூபாயின் மதிப்பு 92.35 ஆக குறைந்ததே அதிகபட்ச வீழ்ச்சியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலகளவில் டாலர் மதிப்பு அதிகரித்து வருவதனால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது.
கடந்த 2010ல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 46.67 ஆகவும் 2020ல் ரூ. 76 ஆகவும் 2025ல் ரூ. 90 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய பங்குச்சந்தைகளும் இன்று கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.
crude oil price rise: Rupee Hits New Low Of 92.37 Against US Dollar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கச்சா எண்ணெய் விலை 15% சரிவு! டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி!!

இந்திய ரூபாயின் மதிப்பு 92.81 ஆக உயர்வு! 12 ஆண்டுகளில் இல்லாத எழுச்சி! எப்படி?

கச்சா எண்ணெய் 100 டாலர்! இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி! ரூ. 92.35 ஆகச் சரிவு!!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை




