இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2-ம் நாளாக இன்று(மார்ச் 12) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,369.65 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.20 மணியளவில் சென்செக்ஸ் 655.19 புள்ளிகள் குறைந்து 76,208.52 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதிகபட்சமாக 850 புள்ளிகள் வரை குறைந்தது. அதிகபட்சமாக காலை 900 புள்ளிகள் வரை சரிந்தது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 196.85 புள்ளிகள் குறைந்து 23,670.00 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி 50 குறியீட்டில் கோல் இந்தியா, அதானி எண்டர்பிரைசஸ், என்டிபிசி, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
சென்செக்ஸ் 30 பங்குகளில் பவர் கிரிட், என்டிபிசி, ரிலையன்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக் ஆகிய நிறுவனங்கள் உயர்ந்தும் மற்ற நிறுவனங்கள் சரிந்தும் வர்த்தகமாகின்றன.
நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.58 சதவீதம், 0.88 சதவீதம் சரிந்து வர்த்தகமாகின.
துறை வாரியாக, நிஃப்டி ஆட்டோ மிக மோசமான செயல்பாட்டில் உள்ளது. நிஃப்டி நுகர்வோர் பொருட்கள், ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயு உயர்வுடன் வர்த்தகமாகின்றன.
பிரெண்ட் கச்சா எண்ணெய் 9.16 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 101.53 டாலராக உள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான போராலும் கச்சா எண்ணெய் விலை உயர்வாலும் பங்குச்சந்தைகள் இன்று சரிவைச் சந்தித்து வருகின்றன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92.37 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
Summary
Stock Market: Sensex recovers 600 pts from day's low, Nifty above 23,700
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு! ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!

சரிந்து மீளும் பங்குச்சந்தை! எண்ணெய் & எரிவாயுப் பங்குகள் சரிவு!

பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை




