இந்திய பங்குச்சந்தைகள் இன்று(மார்ச் 11) கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,238.91 புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 908.97 புள்ளிகள் குறைந்து 77,297.01 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 250.45 புள்ளிகள் குறைந்து 24,011.15 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
முன்னதாக சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தும் நிஃப்டி 24,000 புள்ளிகளுக்கு கீழும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக்சிஸ் வங்கி, மேக்ஸ் ஹெல்த்கேர், கோட்டக் மஹிந்திரா வங்கி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், டாடா நுகர்வோர் பொருள்கள்ம் பாரதி ஏர்டெல் ஆகியவை கடும் இழப்பைச் சந்தித்து வருகின்றன.
அதானி போர்ட்ஸ், இண்டிகோ, என்டிபிசி, சன் பார்மா, டாடா ஸ்டீல், பவர் கிரிட், எட்டர்னல், டெக் மஹிந்திரா, எல்&டி ஆகிய நிறுவனங்கள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன.
நிஃப்டி மிட்கேப் நிலையாக உள்ளது, அதேநேரத்தில் நிஃப்டி ஸ்மால்கேப் 0.58 சதவீதம் உயர்ந்தது.
துறை வாரியாக, நிஃப்டி உலோகம், ஆட்டோ குறியீடுகள் நேர்மறையுடன் வர்த்தகமாகிறது. நிஃப்டி ஃபைனான்சியல் சர்வீசஸ், வங்கி குறியீடுகள் சரிவுடன் வர்த்தகமாகின்றன.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது பங்குச்சந்தையில் அவ்வப்போது கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, அதேபோல வெளிநாட்டுப் பங்குகள் அதிகம் விற்பனையாவதும் பங்குச்சந்தை சரிவுக்குக் காரணமாக கூறப்படுகிறது.
Summary
stock market: Sensex crashes over 1,000 pts from day's high, Nifty near 24,000
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு! ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!

பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!

பங்குச்சந்தை வீழ்ச்சி! எண்ணெய் & எரிவாயு, பார்மா பங்குகள் சரிவு!!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



