நேற்று முன்தினம்(மார்ச் 2) பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்த நிலையில் 2-ம் நாளாக இன்றும்(மார்ச் 4) இந்திய பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,528.82 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் பிற்பகல் 1.25 மணி நிலவரப்படி 1,215.22 புள்ளிகள் சரிந்து 1,215.22 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 404.95 புள்ளிகள் குறைந்து 24,460.75 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
இஸ்ரேல் - ஈரான் போர்
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் மத்திய கிழக்கு நாடுகள் பதற்றத்தில் உள்ளன. 5 ஆவது நாளாக போர் தொடர்ந்து வருகிறது. இது முதலீட்டாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் சில பங்குச்சந்தைகள் மூடப்பட்டுள்ளன.
வெளிநாட்டு பங்குகள் விற்பனை
வர்த்தக நிலைத்தன்மை இல்லாததால் பங்குகள் அதிகமாக இன்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாலரும் பங்குகளை விற்று வருகின்றனர்.
இதுவரை ரூ. 8 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
எண்ணெய் வளம் அதிகமுள்ள ஈரான் தற்போது போர் நடத்திவருவதால் கச்சா எண்ணெய் விலை கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய் சுமார் 85% இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் பணவீக்கம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பங்குச்சந்தை தற்போது நிச்சயமற்ற தன்மையில் இருப்பதாகவும் இது எவ்வளவு காலம் தொடரும் என்று கூற முடியாது என்றும் கூறுகிறார்கள்.
இந்தியாவுக்கு எண்ணெய் விலை உயர்வு அதனால் பெட்ரோல், டீசல் விலையில் தாக்கம் இருக்கலாம் என்கின்றனர்.
உலக பங்குச்சந்தைகளும் சரிவு
தென் கொரியாவின் கோஸ்பி பங்குச்சந்தை கடுமையாகச் சரிவைச் சந்தித்ததால் 20 நிமிடங்களுக்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Stock market: Rs 8 Lakh Crore Wiped Out; Why Markets Are Falling Today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சரிந்து மீளும் பங்குச்சந்தை! எண்ணெய் & எரிவாயுப் பங்குகள் சரிவு!

பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு! ரூ. 6.5 லட்சம் கோடி இழப்பு!

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! 24,000- க்குக் கீழ் நிஃப்டி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு!

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!! காரணம்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


