லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

போர் பதற்றம்: கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!

சென்செக்ஸ் 1,122.66 புள்ளிகள் சரிந்து 79,116.19 ஆகவும், நிஃப்டி 385.20 புள்ளிகள் சரிந்து 24,480.50 புள்ளிகளாக நிலைபெற்றது.

News image

கோப்புப் படம்

Updated On :4 மார்ச் 2026, 12:25 pm

மும்பை: மேற்கு ஆசியாவில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மூண்டுள்ள போர் தீவிரமடைந்து வருவதும், ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட பலவீனமான போக்கு உள்ளிட்டவையால், உள்நாட்டில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன.

தொடர்ந்து 4வது அமர்வாக, சரிந்த 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ், இன்றைய காலை நேர வர்த்தகத்தில் 1,795.65 புள்ளிகள் சரிந்து 78,443.20 ஆக இருந்தது. அதே வேளையில், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி தொடர்ந்து 3வது அமர்வாக 560.3 புள்ளிகள் சரிந்து 24,305.40 ஆக இருந்தது.

வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,122.66 புள்ளிகள் சரிந்து 79,116.19 ஆகவும், நிஃப்டி 385.20 புள்ளிகள் சரிந்து, கடந்த ஆறு மாதங்களில் பதிவான குறைந்த அளவான 24,480.50 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

நிஃப்டி-யில் மொத்தம் 3,337 பங்குகள் வர்த்தகமான நிலையில் 673 பங்குகள் உயர்ந்தும் 2,577 பங்குகள் சரிந்தும் 87 பங்குகள் எவ்வித மாற்றமின்றி முடிவடைந்தன.

சென்செக்ஸில் டாடா ஸ்டீல் 6.76 சதவீதமும், லார்சன் & டூப்ரோ 4.53 சதவீதம் சரிந்த நிலையில் பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், என்டிபிசி, இன்டர்குளோப் ஏவியேஷன், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகளும் சரிந்த நிலையில் மறுபுறம் பாரதி ஏர்டெல், இன்ஃபோசிஸ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை உயர்ந்தன.

நிஃப்டி-யில் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், எல் அண்ட் டி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிந்தும் மறுபுறம் கோல் இந்தியா, பாரதி ஏர்டெல், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.

ஐடி தவிர, மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிந்தன. மறுபுறம் இன்ஃப்ரா, வங்கி, ரியாலிட்டி, மீடியா, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆட்டோ, மெட்டல் பங்குகள் 2 முதல் 4% வரை சரிந்தன.

ஆசிய சந்தைகள் கடும் சரிவில் முடிவடைந்தன. தென் கொரியா கோஸ்பி 12 சதவீதமும், ஜப்பான் நிக்கேய் 225, ஷாங்காய் எஸ்எஸ்இ கூட்டு குறியீடு மற்றும் ஹாங்காங் ஹாங் செங் குறியீடும் கணிசமாக சரிந்தன.

ஐரோப்பிய சந்தைகள் சரிந்த நிலையில், நேற்று (செவ்வாய்கிழமை) அமெரிக்க பங்குச் சந்தையும் சரிவுடன் முடிவடைந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்றைய முன்தினம் (திங்கள்கிழமை) ரூ.3,295.64 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.8,593.87 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் சென்செக்ஸில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.16,32,428.12 கோடி சரிந்து ரூ.4,47,18,243.15 கோடியாக உள்ளது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு ஒன்றுக்கு 3.08 சதவீதம் உயர்ந்து 83.91 அமெரிக்க டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.