மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சென்செக்ஸ் 1,690.23, நிஃப்டி 486.85 புள்ளிகள் சரிவுடன் நிறவைு!

சென்செக்ஸ் 1,690.23 புள்ளிகள் சரிந்து 73,583.22 புள்ளிகளாகவும், நிஃப்டி 486.85 புள்ளிகள் சரிந்து 22,819.60 புள்ளிகளாக நிலைபெற்றது.

News image

Sensex - file picture

Updated On :27 மார்ச் 2026, 11:55 am

மும்பை: 'கரடிகள்' ஆதிக்கம் மீண்டும் திரும்பியதால், இந்திய பங்குச் சந்தையில் வார இறுதி நாளான இன்று வர்த்தகம் சரிவுடன் தொடங்கி சரிவுடன் நிறவைடந்தன.

அனைத்துத் துறைகளிலும் பரவலான விற்பனை அழுத்தம், ரூபாயின் தொடர் வீழ்ச்சி மற்றும் அமெரிக்கா-ஈரான் மோதல் தணிவது குறித்த நீடிக்கும் நிச்சயமற்ற நிலை ஆகியவற்றால், பங்குச் சந்தை குறியீட்டான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் தலா 2 சதவீதம் வரை சரிந்தன.

பலவீனமான உலகளாவிய சந்தை போக்கால், உள்ளூரில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. நிஃப்டி-50 குறியீடு 23,173.55 என்ற குறைந்த நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. வர்த்தக நேரம் செல்லச் செல்ல விற்பனை அழுத்தம் தீவிரமடைந்ததால், நிஃப்டி குறியீடு 22,804.55 என்ற நாளின் குறைந்தபட்ச நிலைக்கு சென்றது. இறுதியில், நாளின் குறைந்தபட்ச நிலைக்கு அருகிலேயே வர்த்தகத்தை நிறைவு பெற்றது.

வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 1,690.23 புள்ளிகள் சரிந்து 73,583.22 புள்ளிகளாகவும், நிஃப்டி 486.85 புள்ளிகள் சரிந்து 22,819.60 புள்ளிகளாக நிலைபெற்றது.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 2.2 சதவீதமும், ஸ்மால்-கேப் குறியீடும் 1.7 சதவீதமும் வரை சரிந்தன.

இந்த வாரத்தின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகிய இரண்டு குறியீடுகளுமே தலா 1.2 சதவீதம் வரை சரிந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம், புதன்கிழமையன்று ரூ. 431.01 லட்சம் கோடியிலிருந்து ரூ. 8.97 லட்சம் கோடியாக குறைந்து, ரூ. 422.04 லட்சம் கோடியாகச் சரிந்தன.

சென்செக்ஸில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 4.55 சதவீதம் சரிந்து அதிகபட்ச சரிவைச் சந்தித்தது. அதனைத் தொடர்ந்து இன்டர்குளோப் ஏவியேஷன், பஜாஜ் ஃபைனான்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எடர்னல் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகளும் சரிந்தன மறுபுறம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பார்தி ஏர்டெல் மற்றும் பவர் கிரிட் உள்ளிட்ட நிறுவனங்களின் உயர்ந்தன.

நிஃப்டி-யில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு, இன்டர்குளோப் ஏவியேஷன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை சரிந்தும் மறுபுறம் ஓஎன்ஜிசி, டிசிஎஸ், விப்ரோ, பார்தி ஏர்டெல் மற்றும் கோல் இந்தியா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.

அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்த நிலையில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் தலா 3 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்தன. வாகனத் துறை, நுகர்வோர் பொருட்கள், மூலதனப் பொருட்கள் மற்றும் தனியார் வங்கி உள்ளிட்ட துறைகள் தலா 2 சதவீதம் வரை சரிந்தன.

ஒரு பேரலுக்கு 100 அமெரிக்க டாலர் என்ற அளவைத் கடந்து கச்சா எண்ணெய் விலை நீடித்ததும், ரூபாயின் மதிப்பு கடுமையாகச் சரிந்ததும், தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு நிதி ஆகியவற்றால் இந்த மந்தநிலை தொடர்ந்தது.

இந்திய ரூபாயின் மதிப்பு புதிய வரலாற்றுச் சரிவை எட்டியது. வர்த்தக இறுதியில், நேற்றைய ரூ. 93.98 என்ற முடிவிலிருந்து 83 காசுகள் சரிந்து ரூ. 94.81 ஆக நிறைவடைந்தது.

ஸ்டெர்லிங் வில்சன், நெட்வொர்க் 18, ஏஜிஸ் வோபாக், டி.எம்.பி.வி, ஐடிபிஐ வங்கி, லோதா டெவலப்பர், கான்கார்ட் பயோடெக், ஜி.எஸ்.எஃப்.சி, அமர ராஜா, பஜாஜ் ஹவுசிங், சொனாட்டா, ஜில்லெட் இந்தியா, ஹிந்துஸ்தான் ஏரோன், குஜராத் கேஸ், ஐ.ஜி.எல் உள்ளிட்ட 900-க்கும் மேற்பட்ட பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 52 வாரக் குறைந்த நிலையை எட்டியது.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பேரல் ஒன்றுக்கு 1.72 சதவீதம் உயர்ந்து 109.9 அமெரிக்க டாலராக உள்ளது.

Summary

Indian equity indices snapped their two-day gaining streak on March 27, ending lower with the Nifty slipping below 22,850

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.