இந்திய பங்குச்சந்தைகளின் சென்செக்ஸ், நிஃப்டி50 குறியீடுகள் தொடர்ந்து 2-ம் நாளாக இன்றும் (ஜூன் 30) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,005.51 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 200.90 புள்ளிகள் குறைந்து 76,527.47 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 65.30 புள்ளிகள் குறைந்து 23,880.95 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி50 குறியீட்டில் ஈச்சர் மோட்டார்ஸ், டாடா நுகர்வோர் பொருள்கள் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை அதிக சரிவைச் சந்தித்த நிறுவனங்களாக இருந்தன.
நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.08 சதவீதம் மற்றும் 0.56 சதவீதம் உயர்வுடன் வர்த்தகமாயின.
துறைவாரியாகப் பார்க்கையில், நிஃப்டி ஐடி குறியீடு 2 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்தது. நிஃப்டி ஆட்டோ, உலோகம் குறியீடுகளும் சரிவைச் சந்தித்த நிலையில் கெமிக்கல், ரியல் எஸ்டேட் குறியீடுகள் சிறப்பாகச் செயல்பட்டன.
Summary
Stock Market today: Sensex slips below 77,000, Nifty holds near 23,920
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் கடும் சரிவு!

ஜூன் 18: பங்குச்சந்தை 4-ம் நாளாக உயர்வுடன் நிறைவு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!

3-ம் நாளாக பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஆட்டோ, ரியல் எஸ்டேட் பங்குகள் சரிவு!








