சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன் 30) சவரனுக்கு ரூ. 2,160 குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது. கடந்த ஜூன் 22-இல் சவரன் ரூ. 1,08,800-க்கும், ஜூன் 23-இல் சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 1,08,480-க்கும், ஜூன் 24-இல் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்து ரூ. 1,06,800-க்கும், ஜூன் 25-இல் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்து ரூ. 1,05,120-க்கும் விற்பனையானது.
வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 13,300-க்கும், சவரனுக்கு ரூ. 1,280 உயர்ந்து, ரூ. 1,06,400-க்கும் விற்பனையான நிலையில், வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது.
வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை கிராம் ரூ. 70 குறைந்து ரூ. 13,300-க்கும், சவரன் ரூ.560 குறைந்து ரூ. 1,06,400-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்க்கிழமை) சவரனுக்கு ரூ. 2,160 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,04,240-க்கும் கிராமுக்கு ரூ. 270 குறைந்து ரூ. 13,030-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் ரூ. 240-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Summary
In Chennai, the price of ornamental gold has decreased by Rs. 2,160 per sovereign.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











