ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காலையில் குறைந்த தங்கம் பிற்பகலில் உயர்வு! (ஜூன் 30)

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் தொடர்பாக...

gold rate rise

தங்கம் விலை உயர்வு - file photo

Published On :30 ஜூன் 2026, 2:08 pm IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன் 30) காலை குறைந்த நிலையில், பிற்பகலில் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றன. ஆனால், தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது அதிரடியாகச் சரிந்த தங்கம் விலை, பிற்பகலில் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 2,160 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,04,240-க்கும் கிராமுக்கு ரூ. 270 குறைந்து ரூ. 13,030-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், பிற்பகலில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,360 உயர்ந்து ரூ. 1,05,600-க்கும் கிராமுக்கு ரூ. 170 உயர்ந்து ரூ. 13,200-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

இன்று காலை வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் ரூ. 240-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனையானது.

பிற்பகலில் சற்று ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.45 லட்சத்துக்கும் விற்பனையாகின்றது.

In Chennai, the price of ornamental gold dropped this morning (June 30) but rose in the afternoon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.