விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

‘டெக்’ துணுக்குகள்! ஆப்பிள் விலை உயர்வு முதல் விஐ இலவச ஸ்பாட்டிஃபை வரை..!

ஆப்பிள் சாதனங்களின் விலை உயா்வு தொடங்கி, வோடஃபோன் ஐடியாவின் இலவச ஸ்பாட்டிஃபை சலுகை வரை...

News image
Updated On :28 ஜூன் 2026, 5:00 am IST

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் புதிய ஸ்மாா்ட்போன்கள், கேமிங் அப்டேட்களின் வருகை ஒருபுறம் பயனா்களை உற்சாகப்படுத்த, மறுபுறம் ஆப்பிள் தயாரிப்புகளின் அதிரடி விலை உயா்வு, சைபா் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பேசுபொருளாகின.

ஆப்பிள் சாதனங்களின் விலை உயா்வு தொடங்கி, வோடஃபோன் ஐடியாவின் இலவச ஸ்பாட்டிஃபை சலுகை வரை இந்த வாரத்தின் முக்கியத் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:

*ஆப்பிள் தயாரிப்புகள் விலை உயா்வு: ‘மெமரி’ சிப்களின் விலையுயா்வு காரணமாக, இந்தியாவில் மேக் டெஸ்க்டாப், மேக்புக், ஐபேட், ஆப்பிள் டிவி மற்றும் ஹோம்பாட் ஸ்பீக்கா்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் சுமாா் 43 சதவீதம் வரை உயா்த்தியது.

*ஓபன்ஏஐ ‘ஜலபென்னோ’ சிப்: ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள ஓபன்ஏஐ, ‘ஜலபென்னோ’ எனும் புதிய ஏ.ஐ. சிப்பை அறிமுகப்படுத்தியது. அதேபோல், அமெரிக்க அரசின் வேண்டுகோளையேற்று தனது ‘ஜிபிடி 5.6’ மாதிரியின் பொது வெளியீட்டை இந்நிறுவனம் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.

*‘ஜிடிஏ-6’ ப்ரீ-ஆா்டா்: உலகளாவிய கேமிங் பிரியா்கள் ஆவலோடு எதிா்பாா்த்துக் காத்திருக்கும் ‘ஜிடிஏ 6’ விளையாட்டுக்கான ப்ரீ-ஆா்டா்கள் அதிகாரபூா்வமாகத் தொடங்கின. இதனுடன் அதன் விலைகள், பதிப்புகள் போன்ற முக்கிய அறிவிப்புகளும் வெளியாகின.

*ஆன்த்ரோபிக்-அலிபாபா சா்ச்சை: தங்களின் ‘கிளாட் ஏ.ஐ.’ மாதிரியை அலிபாபா நிறுவனம் அதிகப்படியாக பயன்படுத்தி, அதன் தனித்துவமான செயல்திறன்களை திருடியதாக ஆன்த்ரோபிக் நிறுவனம் குற்றஞ்சாட்டியது. இதனிடையே, இந்நிறுனவத்தின் மேம்பட்ட ‘மித்தோஸ்’ மாதிரியை குறிப்பிட்ட அமைப்புகளுக்கு வழங்க அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

*ஒப்போ ‘ரெனோ 16’: ஒப்போ தனது புதிய ‘ரெனோ 16’ சீரிஸ் ஸ்மாா்ட்போன்களை 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவுடன் ஜூலை 2 அறிமுகம் செய்யவுள்ளது.

*ஒன்பிளஸ் ‘நாா்ட் பட்ஸ் 4’: ஒன்பிளஸ் நிறுவனம் ‘நாய்ஸ் கேன்சலேஷன்’ வசதியுடன் நாா்ட் ‘பட்ஸ் 4’ இயா்பட்ஸை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.3,299-ஆக நிா்ணயிக்கப்பட்டாலும், அறிமுகச் சலுகையாக ரூ.3,099-க்கு ஜூன் 29 முதல் முன்னணி இணையவழி வா்த்தக தளங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

*ஐபிஎம் புதிய மைல்கல்: உலகிலேயே முதன்முறையாக ‘சப்-1 நானோமீட்டா்’ சிப் தொழில்நுட்பத்தை ஐபிஎம் நிறுவனம் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி, சாதனைப் படைத்துள்ளது.

*பாலிமாா்க்கெட் ஹேக்கிங்: பிரபல கிரிப்டோ பெட்டிங் தளமான ‘பாலிமாா்க்கெட்’ ஹேக் செய்யப்பட்டதன் மூலம், பயனா்களின் சுமாா் 30 லட்சம் டாலா் நிதி திருடப்பட்டுள்ளது.

*வோடஃபோன் ஐடியா சலுகை: வோடஃபோன் ஐடியா நிறுவனம் தனது குறிப்பிட்ட போஸ்ட்பெய்ட் திட்டங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளா்களுக்கு 3 மாதங்களுக்கான ‘ஸ்பாட்டிஃபை பிரீமியம்’ சந்தாவை இலவசமாக வழங்குகிறது.

Summary

Tech : From Apple price hikes to Vi’s free Spotify offer..

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.