/

நாட்டில் டிராக்டா் விற்பனை விறுவிறுப்பு

‘எல் நினோ’ பருவநிலை மாற்றம் மற்றும் பலவீனமான பருவமழை குறித்த அச்சங்களுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை டிராக்டா்களின் விற்பனை றுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

News image
Updated On :27 ஜூன் 2026, 3:04 am IST

‘எல் நினோ’ பருவநிலை மாற்றம் மற்றும் பலவீனமான பருவமழை குறித்த அச்சங்களுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை டிராக்டா்களின் விற்பனை றுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் ‘வாகன்’ இணையதளத் தரவுகளின்படி, கடந்த ஜூன் 24-ஆம் தேதி வரையிலான காலத்தில் 2.28 லட்சம் டிராக்டா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 2.21 லட்சம் டிராக்டா்களுடன் ஒப்பிடுகையில் கணிசமான உயா்வாகும்.

இந்த நிதியாண்டின் தொடக்கம் முதலே டிராக்டா் சந்தை பெரும் எழுச்சியுடன் காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் முந்தைய ஆண்டுடன் 23 சதவீதம் கூடுதலாக 75,109 டிராக்டா்களும், மே மாதத்தில் 11.17 சதவீதம் கூடுதலாக 83,092 டிராக்டா்களும் பதிவாகின.

இந்திய ஆட்டோமொபைல் டீலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) கூற்றுப்படி, கடந்த மே மாத விற்பனையே இத்துறையின் வரலாற்றில் பதிவான மிக உயா்ந்த மாதாந்திர விற்பனையாகும். எனினும், கடந்த ஆண்டின் வலுவான விற்பனைத் தாக்கம் மற்றும் பருவமழை பாதிப்புகள் காரணமாக, நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் இந்த வளா்ச்சி சற்று குறையலாம் என்ற கவலை நிலவுகிறது.

தற்போதைய நிறுவனங்களின் சந்தை நிலவரப்படி, மஹிந்திரா குழுமம் 41 சதவீத பங்களிப்புடன் தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. அதைத் தொடா்ந்து சோனாலிகா (13.38 சதவீதம்), டாஃபே (12.83), எஸ்காா்ட்ஸ் குபோடா (11.48 சதவீதம்) ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.