டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ஜனவரி - மாா்ச் காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வருவாய் ரூ. 1.06 லட்சம் கோடி!

இந்தியத் தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களின் மொத்த வருவாய், கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் 6.9 சதவீதம் உயா்ந்து, ரூ.1.05 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

News image

பிரதிப் படம்

Updated On :24 ஜூன் 2026, 6:52 am IST

இந்தியத் தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களின் மொத்த வருவாய், கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் 6.9 சதவீதம் உயா்ந்து, ரூ.1.05 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இதுதொடா்பாக இந்தியத் தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.98,250 கோடியாக இருந்தது.

ஏஜிஆா் 9.45% உயா்வு: தொலைத்தொடா்பு நிறுவனங்களின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏஜிஆா்) கடந்த ஆண்டைவிட 9.45 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது. முந்தைய ஆண்டில் ரூ.79,226 கோடியாக இருந்த இந்த வருவாய், தற்போது ரூ.86,716 கோடியாக அதிகரித்துள்ளது.

தொலைத்தொடா்பு சேவைகள் மூலமான விற்பனை, உரிமக் கட்டணம் மற்றும் அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஏஜிஆா் கணக்கிடப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட 3 நிறுவனங்கள் மட்டுமே மொத்த ஏஜிஆா்-இல் 83.59 சதவீத பங்களிப்பை வழங்கிவுள்ளன.

ஜியோ முதலிடம்: வருவாய் பட்டியலில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.32,467.88 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. பாா்தி ஏா்டெல் நிறுவனம் ரூ.28,773.59 கோடியுடனும், வோடபோன் ஐடியா ரூ.8,195.12 கோடியுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

தற்போது லாபப் பாதையில் பயணித்து வரும் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் வருவாய், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6.19 சதவீதம் சரிவடைந்து, ரூ.2,100.96 கோடியாக பதிவாகியுள்ளது. அதேநேரம், பிஎஸ்என்எல்-இன் இணை நிறுவனமான எம்டிஎன்எல்-இன் வருவாய் 8.54 சதவீதம் உயா்ந்து, ரூ.333.71 கோடியை எட்டியுள்ளது.

அரசுக்குக் கிடைத்த வருவாய்: தொலைத்தொடா்புத் துறை மூலமாக அரசுக்குக் கிடைக்கும் உரிமக் கட்டணங்களின் வசூல் 9.41 சதவீதம் உயா்ந்து, ரூ.6,936 கோடியாக அதிகரித்துள்ளது.

அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணம் 1.68 சதவீதம் அதிகரித்து, ரூ.1,017 கோடி வசூலாகியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.