மும்பை: உலகளாவிய பங்குச் சந்தையில் நிலவிய மந்தநிலை தொடர்ந்து உள்ளூர் பங்குச் சந்தையில் எச்.டி.எஃப்.சி. வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் பலவீனமடைந்ததைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்து நிறைவடைந்தன.
தொடக்க வர்த்தகத்தில், சென்செக்ஸ் 1,011.56 புள்ளிகள் சரிந்து 76,082.51 புள்ளிகள் வரை சென்றது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 893.39 புள்ளிகள் சரிந்து 76,200.68 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 278.80 புள்ளிகள் சரிந்து 23,824.10 புள்ளிகளாக நிறைவடைந்தன.
கடந்த வாரம், ஐந்து வர்த்தக அமர்வுகளில் 4 அமர்வுகள் ஏற்றம் கண்டன.
சென்செக்ஸில் இன்ஃபோசிஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவை தலா 3 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன. பாரத் எலக்ட்ரானிக்ஸ், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், எச்சிஎல் டெக் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பங்குகள் சரிந்தன மறுபுறம் பவர் கிரிட், ஆக்சிஸ் வங்கி, சன் பார்மா மற்றும் மாருதி சுஸுகி ஆகிய பங்குகள் உயர்ந்தன.
நிஃப்டி ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் 100 குறியீடுகள் தலா 0.6 சதவீதம் மற்றும் 0.75 சதவீதம் சரிந்தன.
தரவுகளின் அடிப்படையில், நேற்று (திங்கள்கிழமை) வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 635.91 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடுகள் கடும் சரிவுடன் நிறைவடைந்தன. இதில் கோஸ்பி குறியீடு மற்றும் 10 சதவீதம் சரிந்தன.
ஐரோப்பிய சந்தைகளும் சரிவுடனேயே இன்று வர்த்தகமானது.
தொழில்நுட்பத் துறை சார்ந்த பங்குகள் பெருமளவில் விற்கப்பட்டதால், இந்தியப் பங்குச் சந்தை சமீபத்திய ஏற்றப் பாதையிலிருந்து விலகி, உலகளாவிய சந்தைகளைப் போலவே கடும் சரிவைச் சந்தித்தன. அதே வேளயில், 2 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்த தகவல் தொழில்நுட்பத் துறை இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.67 சதவீதம் சரிந்து, பீப்பாய் ஒன்றுக்கு 77.46 டாலராக உள்ளது.
Summary
Stock market benchmark indices Sensex and Nifty faced heavy selling pressure on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை சரிவால் இந்தியப் பங்குச் சந்தை மீட்சி! சென்செக்ஸ் 790 புள்ளிகள் உயர்வு!!

உலகளாவிய பங்குச் சந்தை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!!

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani





