மும்பை: அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கைகளுக்கு மத்தியில், கச்சா எண்ணெய் விலை சரிவு உள்ளிட்டவையால், இன்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தை மீண்டன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 522.66 புள்ளிகள் உயர்ந்து 77,325.56 புள்ளிகளை எட்டியது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 291.17 புள்ளிகள் உயர்ந்து, 77,094.07 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 89.80 புள்ளிகள் உயர்ந்து 24,102.90 புள்ளிகளாக நிலைபெற்றது.
முதலீட்டாளர்கள் தொடர் கொள்முதல் மற்றும் வெளிநாட்டு நிதி வரவு உள்ளிட்டவையால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட முன்னணி பங்குகளில் ஏற்பட்ட கொள்முதலைத் தொடர்ந்து இந்த மீட்சி ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
சென்செக்ஸில் டெக் மஹிந்திரா, சன் பார்மா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன், பவர் கிரிட் மற்றும் ட்ரென்ட் ஆகிய பங்குகள் சரிந்தன.
நிஃப்டி-யில் மிட்கேப் குறியீடு 0.3 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.6 சதவீதம் உயர்ந்தன.
துறைவாரியாக, எஃப்எம்சிஜி மற்றும் நுகர்வோர் பொருட்கள் தவிர அனைத்து குறியீடுகளும் ஏற்றத்துடன் முடிவடைந்தன. ஊடகம், தகவல் தொழில்நுட்பம், உலோகம், மருந்து, ஆட்டோ மற்றும் எரிசக்தி குறியீடுகள் தலா 0.5 முதல் 1 சதவீதம் வரை உயர்ந்தன.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடு மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு ஆகியவை உயர்ந்த நிலையில், ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு சரிவுடன் நிறைவடைந்தன.
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தையின் முதல் சுற்று ஆக்கப்பூர்வமான முறையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து உலகளாவிய முதலீட்டாளர்களின் நம்பிக்கை வலுப்பெற்றதால், உள்ளூரிலும் இந்திய பங்குச் சந்தை முன்னேற்றம் கண்டது.
ஐரோப்பாவில் சந்தைகள் பெரும்பாலும் சரிவுடன் வர்த்தகமாகின. ஜூன்டீன்த் நாளை முன்னிட்டு அமெரிக்க பங்குச் சந்தைகள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்தின் நடைபெற்ற இரண்டு நாள் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு செயல் திட்டத்திற்கு அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளன என்று மத்தியஸ்தர்களான பாகிஸ்தான் மற்றும் கத்தார் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.
பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமையன்று ரூ. 4,859.07 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 35 காசுகள் சரிந்து ரூ. 94.68 ஆக நிறைவடைந்தன.
உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 1.66 சதவீதம் சரிந்து 79.23 அமெரிக்க டாலராக உள்ளது.
Summary
Stock markets rebounded on Monday gaining 291 points.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விலை சரிவால் ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

ஐடி பங்குகளின் எழுச்சியால் சென்செக்ஸ் 383 புள்ளிகள் உயர்வு! 23,400 புள்ளிகளை கடந்த நிஃப்டி!!

சரிவிலிருந்து மீண்டெழுந்த சென்செக்ஸ், நிஃப்டி!!

4 நாள் வீழ்ச்சிக்கு பிறகு, மிதமான எழுச்சியுடன் நிறவடைந்த பங்குச் சந்தை!
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan





