சென்னை: வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து டாலர் டெபாசிட்களை ஈர்ப்பதற்காக, இந்திய வங்கிகள் வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்தி வருகின்றன. முறையான ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை தொடர்ந்து இந்த போட்டி எழுந்துள்ளது.
தனியார் துறை வங்கியான சவுத் இந்தியன் வங்கி, வெளிநாடு வாழ் இந்தியர்களின், டாலர் வைப்புகளுக்கான வட்டி விகிதங்களைத் திருத்தியமைத்து, ஆண்டுக்கு 6.50 சதவீதம் வரை வட்டி வழங்குவதாக அறிவித்தது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள், அந்நியச் செலாவணி சேமிப்புகளுக்குச் சாதகமான வருவாயை வழங்கும் நோக்கில், மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் முதிர்வுக் காலம் கொண்ட வைப்புத்தொகைகளுக்கு இந்த மாற்றியமைக்கப்பட்ட வட்டி விகிதம் பொருந்தும் என்றது.
மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான காலவரையறை கொண்ட புதிய FCNR(B) வைப்புத்தொகைகளுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் அறிமுகப்படுத்திய அந்நியச் செலாவணி பரிமாற்ற வசதியைத் தொடர்ந்து இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Summary
South Indian Bank announced a revision in its interest rates for Foreign Currency Non-Resident (Bank) USD deposits.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











