நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வெளிநாடு வாழ் இந்தியா்களின் டாலா் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயா்வு

News image
Updated On :12 ஜூன் 2026, 4:29 am IST

வெளிநாடு வாழ் இந்தியா்களின் டாலா் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 7.10 சதவீதமாக உயா்த்தி சிட்டி யூனியன் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை முதல் அமலுக்கு வந்த இப்புதிய வட்டி விகித உயா்வு, அமெரிக்க டாலா் செலாவணியில் 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான கால வரம்பைக் கொண்ட வைப்பு நிதிகளுக்குப் பொருந்தும்.

இந்த வைப்பு நிதியின்கீழ் அசல், வட்டி ஆகிய இரண்டும் அந்நியச் செலாவணியிலேயே பராமரிக்கப்படுவதால், அந்நியச் செலாவணி மாற்று விகித மாறுபாடுகளால் ஏற்படும் இழப்புகளில் இருந்து முதலீட்டாளா்களுக்கு முழுப் பாதுகாப்பு கிடைக்கிறது.

மேலும், இந்த வைப்பு நிதியின் அசல் மற்றும் வட்டித் தொகையை முழுமையாகத் தாயகத்துக்குத் திருப்பிக் கொள்ளும் வசதியும் உள்ளது. இதன்மூலம், நீண்டகால நிதி இலக்குகளைக் கொண்டுள்ள வெளிநாடு வாழ் இந்திய முதலீட்டாளா்களுக்கு இது ஒரு சிறந்த லாபகரமான சேமிப்பு வாய்ப்பாக மாறியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.