புதுதில்லி: சுமார் ரூ. 5,600 கோடி வருவாய் ஈட்டக்கூடிய வீட்டுவசதித் திட்டத்தை உருவாக்குவதற்காக, மும்பையில் 15 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதாக ரியல் எஸ்டேட் நிறுவனமான 'மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் டெவலப்பர்ஸ்' தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் சுமார் ரூ. 5,600 கோடி வருவாய் கிடைக்கும் என்றும், சுமார் 1.8 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றது நிறுவனம்.
போட்டி ஏல நடைமுறை மூலம், நிலம் கையகப்படுத்தப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஏலத் தொகை குறித்த விவரங்களை வெளியிடவில்லை.
1994ல் நிறுவப்பட்ட மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் நிறுவனம், இந்தியாவில் உள்ள ஏழு நகரங்களில், குடியிருப்புத் திட்டங்களை அமைத்து வருவதாகவும், அதில் மொத்தம் 53.65 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தது.
மேலும், நான்கு இடங்களில் அதன் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் 5,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் திட்டங்களை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
Summary
Mahindra Lifespace Developers has acquired a 15-acre land parcel in Mumbai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










