நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

விரைவில் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்! ஐரோப்பிய ஒன்றியம்

விரைவில் இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது பற்றி...

News image

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களுடன் பிரதமர் மோடி. - படம் - எக்ஸ்

Updated On :17 ஜூன் 2026, 7:49 pm IST

விரைவில் இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் புதன்கிழமை (ஜுன் 17) தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்லோவாக்கியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒரு வார கால அரசுமுறைப் பயணத்தை சனிக்கிழமை (ஜூன் 13) தொடங்கினார்.

அதன்படி, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோரை பிரதமர் மோடி இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து உர்சுலா வான் டெர் லேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மீண்டும் இவ்வளவு விரைவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. நமது இரு நாடுகளுக்கிடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் வேகமாகச் செயல்பட்டு வருகிறோம்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம். இது தொடர்பான பணிகளை துரிதப்படுத்துவோம். அத்துடன், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடமான IMEC- ஐ மேம்படுத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

European Union Commission President Ursula von der Leyen stated on Wednesday (June 17) that a free trade agreement with India would be signed soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.