அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இறுதியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கச்சா எண்ணெய் விலை திங்கள்கிழமை குறைந்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் போர் 100 நாள்களைக் கடந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
மேலும், ஹோா்முஸ் நீரிணையை சுங்கக் கட்டணம் ஏதுமின்றி பயன்படுத்தலாம் என்றும், சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 ஆம் தேதி இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இதன் எதிரொலியாக இன்று அதிகாலை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 4.85% சரிந்து 80.76 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 4.35% சரிந்து 83.51 டாலருக்கும் விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஏற்றம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சுமார் ரூ. 8 வரை உயர்த்தப்பட்டது.
தற்போது கச்சா எண்ணெய் விலை சரிவைக் கண்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Summary
Crude oil prices drop by 5%! Will petrol and diesel prices decrease?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு! அலறும் வாகன ஓட்டிகள்..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி - காங்கிரஸ்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு உதயநிதி கண்டனம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின்
விடியோக்கள்

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK




