பங்குச்சந்தைகள் இன்று(ஜூன் 9) சரிவுடன் தொடங்கிய நிலையில் தற்போது சற்றே உயர்வுடன் வர்த்தகமாகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,035.41 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.10 மணியளவில் சென்செக்ஸ் 28.62 புள்ளிகள் உயர்ந்து 73,552.88 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதிகபட்சமாக சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை சரிந்தது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 23.75
புள்ளிகள் உயர்ந்து 23,146.75 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 1.07 சதவீதம் மற்றும் 1.09 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகின.
துறைரீதியாக நிஃப்டி ரியல் எஸ்டேட், வங்கி, நிதிச் சேவைகள், நுகர்வோர் பொருள்கள், ஆகியவை சிறப்பாகச் செயல்பட்டன. நிஃப்டி ஐடி பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது.
நிஃப்டி50 குறியீட்டில் ட்ரென்ட், இன்டர்குளோப் ஏவியேஷன், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன.
சென்செக்ஸ் 30 பங்குகளில் டாடா ஸ்டீல் தவிர மற்ற பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வர்த்தக தொடக்கத்தில் 95.46 ஆக இருந்தது.
Summary
Stock Market: Sensex off 500 pts from day's high
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு; ரியல் எஸ்டேட், ஆட்டோ பங்குகள் லாபம்!

பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிவு! ஏன்?

எம்எஸ்சிஐ மறுசீரமைப்பு, பருவமழை அச்சம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி!







