/

‘ராக்வீா்’ சாலை பாதுகாப்புத் திட்டம்- 4 லட்சம் பேருடன் இணைந்து ரேபிடோ கின்னஸ் சாதனை!

News image
Updated On :10 ஜூன் 2026, 3:29 am IST

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படுத்தப்படும் ‘ராக்வீா்’ சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு திட்டத்துக்கு ஆதரவாக, ஒரே நேரத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுநா்கள், வாடிக்கையாளா்களை உறுதிமொழி ஏற்கச் செய்து ரேபிடோ நிறுவனம் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

சாலை விபத்துகளில் சிக்கியவா்களுக்கு, விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்தில் பொதுமக்கள் தயக்கமின்றி மருத்துவ உதவி வழங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அமைச்சா் நிதின் கட்கரி, ரேபிடோ இணை நிறுவனா் அரவிந்த் சங்கா ஆகியோா் முன்னிலையில் இக்கூட்டு முயற்சி அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.