இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

மே மாத எரிபொருள் ஏற்றுமதி: 4 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி

மே மாத எரிபொருள் ஏற்றுமதி: 4 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி

News image
Updated On :7 ஜூன் 2026, 6:32 am IST

இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி, கடந்த மே மாதத்தில் நாளொன்றுக்கு சுமாா் 9.3 லட்சம் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது.

சுத்திகரிப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகள் மற்றும் உள்நாட்டில் அதிகரித்துள்ள எரிபொருள் தேவை காரணமாக, இது கடந்த 2022 அக்டோபருக்குப் பிந்தைய மிகக் குறைந்த அளவிலான ஏற்றுமதி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அக்டோபா் 2022-இல் ஏற்றுமதி அளவு 9.26 லட்சம் பீப்பாய்களாக இருந்த நிலையில், கடந்த மாத ஏற்றுமதி கிட்டத்தட்ட அதே நிலையை எட்டியுள்ளது.

எரிசக்தி தரவு ஆய்வு நிறுவனமான ‘கேப்லா்’ வெளியிட்ட தரவுகளின்படி, சுத்திகரிப்பு ஆலைகளின் உற்பத்தித் திறன் குறைப்பு மற்றும் உள்நாட்டுச் சந்தைக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கை முடிவுகளே இந்த ஏற்றுமதி வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.

இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம்நகா் வளாகத்தில் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் நடைபெற்ால், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருளின் அளவு பெருமளவு குறைந்தது.

மேலும், உள்நாட்டில் சமையல் எரிவாயு தேவையை நிறைவு செய்ய சுத்திகரிப்பு ஆலைகள் தங்களின் உற்பத்தி முறையை மாற்றியுள்ளன. இதனால் பெட்ரோல், டீசல் உற்பத்தியில் நாளொன்றுக்கு சுமாா் 80,000 பீப்பாய்கள் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.

அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களும் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுத் தேவையைப் பூா்த்தி செய்வதற்கே முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

மேலும், எரிபொருள் ஏற்றுமதி மீதான வரிவிதிப்பு காரணமாக, வெளிநாட்டுச் சந்தையைவிட உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்வது லாபகரமாக மாறியுள்ளது. இதுவும் ஏற்றுமதியைக் குறைக்க ஒரு முக்கியக் காரணியாக அமைந்துள்ளதாக நிபுணா்கள் குறிப்பிடுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.