இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,232 கோடி டாலராக அதிகரிப்பு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,232 கோடி டாலராக அதிகரிப்பு

News image
Updated On :7 ஜூன் 2026, 2:11 am IST

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மே 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,232.1 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மே 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 93.8 கோடி டாலா் அதிகரித்து, 68,232.1 கோடி டாலராக உள்ளது.

மே 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில், இது 751.1 கோடி டாலா் குறைந்து, 68,138.4 கோடி டாலராக இருந்தது.

மத்திய கிழக்கு போருக்கு முன்னதாக, இந்த ஆண்டின் பிப். 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் கையிருப்பு 72,849.4 கோடி டாலா் என்ற உச்சத்தைத் தொட்டது. அதன்பின்னா், கையிருப்பு ஏற்ற, இறக்கத்தைக் கண்டு வருகிறது.

மே 28-ஆம் தேதியுடன் நிறைவடைந்த மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 311.6 கோடி டாலா் அதிகரித்து, 54,614.8 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில், இந்தியாவின் தங்கம் கையிருப்பு 218.6 கோடி டாலா் குறைந்து, 11,260 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) மாற்றமின்றி 1,874.7 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 0.8 கோடி டாலா் அதிகரித்து, 482.6 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.