ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 889 புள்ளிகளுடனும், 24,250 புள்ளிகளை கடந்த நிஃப்டி!

சென்செக்ஸ் 888.68 புள்ளிகள் உயர்ந்து 77,654.60 புள்ளிகளாகவும், நிஃப்டி 264.85 புள்ளிகள் உயர்ந்து 24,250.20 புள்ளிகளாக நிலைபெற்றது.

கோப்புப் படம்

Published On :29 ஜூலை 2026, 5:19 pm IST

மும்பை: ஐடி பங்குகள், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் புதிய வெளிநாட்டு நிதி வரவு உள்ளிட்டவையால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு, இன்றைய வர்த்தகத்தில் 1 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 999.57 புள்ளிகள் உயர்ந்து, 77,765.49 ஐ எட்டியது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 888.68 புள்ளிகள் உயர்ந்து 77,654.60 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 264.85 புள்ளிகள் உயர்ந்து 24,250.20 புள்ளிகளாக நிலைபெற்றது.

உலகளாவிய அச்சமானது, வலுவான உள்நாட்டு அடிப்படைகளுடன் மேலோங்கியதால், இன்று பிற்பகுதியில் அமெரிக்க பெடரல் ரிசர்வின் கொள்கை முடிவு வெளியாகவுள்ள நிலையிலும், இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்தன.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் 4.70 சதவிகிதமும், இன்ஃபோசிஸ் 4.50 சதவிகிதமும் உயர்ந்தன.

சென்செக்ஸில் ட்ரென்ட், லார்சன் & டூப்ரோ, டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்.சி.எல் டெக் மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் அதானி போர்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, பவர் கிரிட், பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் என்.டி.பி.சி ஆகிய பங்குகள் சரிந்தன.

நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.8% உயர்ந்த நிலையில் நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 1.5% அதிகரித்தது. துறைவாரியாக, ரியல்டி தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

தகவல் தொழில்நுட்பம், ஊடகம், உலோகம், மருந்து, தொலைத்தொடர்பு, தனியார் வங்கி, எஃப்.எம்.சி.ஜி மற்றும் நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட குறியீடுகள் தலா 1 முதல் 2% வரை உயர்ந்தன.

ஆசிய சந்தையில், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 5.98 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 225 குறியீடும் சரிவுடன் முடிவடைந்தன. அதே நேரத்தில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடும் உயர்வுடன் நிலைபெற்றது.

ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் சரிவுடன் வர்த்தகமானது. நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க சந்தைகள் பெரும்பாலும் உயர்வுடன் நிறைவடைந்தன.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 3.79 சதவீதம் உயர்ந்து 87.28 அமெரிக்க டாலராக உள்ளது.

Summary

Benchmark indices Sensex and Nifty rebounded sharply on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.